top of page

LIFE INSURANCE CORPORATION OF INDIA
AGENT:M.RAGUL(B.E.,Aero)

அன்பார்ந்த பெற்றோர்களே!
வணக்கம்! " பெற்ற பிள்ளை கைவிட்டாலும், கற்ற கல்வி கைவிடாது " என்றார், மகாத்மா காந்தி.கல்வியானது நமக்குப் பண்பையும், அறிவையும், பொருளாதாரப் பாதுகாப்பையும் உறுதியாகத் தரும் என நாம் அனைவரும் அறிந்திருப்பதாலேயே, நமது வருமானத்தின் பெரும்பகுதியை நமது பிள்ளைகளின் பள்ளிப் படிப்புக்காக செலவு செய்கிறோம்.நமது குடும்பத்தின் நிதி நெருக்கடியை உணர்கின்ற பிள்ளைகள் பள்ளிப் படிப்பை மிகுதியான மதிப்பெண்களுடன் வெற்றிகரமாக முடிக்கின்றனர்.பள்ளிப் படிப்பில் சாதனை படைக்கின்ற நமது பிள்ளைகளைச் சிறந்த கல்லூரியில் சிறந்த பட்டப் படிப்பில் சேர்க்க வேண்டுமென ஞாயமாகவே ஆசைப்படுகிறோம். " வரவு எட்டணா, செலவு பத்தணா " என்ற குடும்பச் சூழலில் பள்ளிப் படிப்புக்குப் பணம் கட்டுவதற்காகவே வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி, கட்டு செட்டாக குடும்பம் நடத்துகிறோம். இந்த நிலையில் வெளியூரில் உள்ள சிறந்த கல்லூரி மற்றும் விடுதிக்குப் பணம் கட்டுவதற்காக மொத்தமாக பெருந்தொகையைப் புரட்ட முடியாமல் வட்டிக்குக் கடன் வாங்கி, பிறகு கடனை அடைக்க முடியாமல் நகையையும், நிலத்தையும் விற்கிறோம்.
மேற்கண்ட நிலையானது நமது நிம்மதியைக் குலைத்து, அதன் விளைவாக உடல் நோயையும் ஏற்படுத்திவிடுகிறது.இந்த நிலையைத் தடுப்பதற்காகவே இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம், பல வகையான காப்பீட்டு ஒப்பந்தப் பத்திரங்களை அளிக்கிறது.உங்களுடைய பிள்ளை பிறந்த உடனேயோ, மழலையர் பள்ளியில் படிக்கும்போதோ, உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதோ உள்ள எந்த ஒரு காலத்திலும், நீங்கள் LIC-இல் காப்பீட்டு ஒப்பந்தப் பத்திரங்களைப் பெற்றால், ஒப்பந்தத்தின் முதிர்வு காலத்தில் வரும் மிகப் பெருந்தொகையை உங்களுடைய பிள்ளைகளின் தரமான கல்லூரிப் படிப்புக்குச் செலவு செய்வதற்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த அறிவார்ந்த மற்றும் திட்டமிட்ட செயலால், உங்களது மன நலம், உடல் நலம், அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் ஆகியவை எந்த இழப்புக்கும் உள்ளாகாமல் இருக்கும்.குறைந்தபட்ச மாதாந்திரக் காப்பீட்டுக் கட்டணம் 500 உரூபாய் ஆகும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் 500 உரூபாய்க்கு மேலும் கட்டலாம். எனவே, உங்களுடைய பிள்ளைகளின் கல்விக் கனவை நனவாக்குவதற்காகவும், உங்களது குடும்ப நலனைப் பாதுகாப்பதற்காகவும் காலம் தாழ்த்தாமல் LIC-இல் காப்பீட்டு ஒப்பந்தப் பத்திரம் பெற்று, மாதாந்திரக் கட்டணம் கட்டுமாறு அக்கறையுடன் ஆலோசனை கூறி, அன்புடன் வேண்டி விடைபெறுகிறேன்.
bottom of page